/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் ரோடு விரிவாக்கம் ஏழு மின்கம்பங்கள் இடமாற்றம் திருப்புவனத்தில் ரோடு விரிவாக்கம் ஏழு மின்கம்பங்கள் இடமாற்றம்
திருப்புவனத்தில் ரோடு விரிவாக்கம் ஏழு மின்கம்பங்கள் இடமாற்றம்
திருப்புவனத்தில் ரோடு விரிவாக்கம் ஏழு மின்கம்பங்கள் இடமாற்றம்
திருப்புவனத்தில் ரோடு விரிவாக்கம் ஏழு மின்கம்பங்கள் இடமாற்றம்
ADDED : ஜூன் 27, 2025 11:54 PM
திருப்புவனம்:திருப்புவனத்தில் சாலை விரிவாக்கப்பணிக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏழு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பலரும் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் விபத்தும் நேரிட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்ததையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிக்காவண்ணம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்புவனம் நெல்முடிக்கரை எரிவாயு மயானத்தில் இருந்து புதுார் கடைசி வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது.
தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் இரவு ஒன்பது மணி தொடங்கி காலை ஐந்து மணி வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மின்கம்பங்கள் ரோட்டிலேயே இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக இருந்தது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏழு மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு மின்வாரியத்திற்கு ஏழு லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
நரிக்குடி ரோடு திரும்பும் இடத்தில் மணி மந்திர விநாயகர் கோயில் வாசலில் உள்ள இரும்பு மின்கம்பத்தால் அடிக்கடி விபத்து நேரிட்டு வருவதால் முதலில் அந்த மின்கம்பம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.