/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வருவாய்துறையினர் போராட்டம் வருவாய் பணிகள் பாதிப்பு வருவாய்துறையினர் போராட்டம் வருவாய் பணிகள் பாதிப்பு
வருவாய்துறையினர் போராட்டம் வருவாய் பணிகள் பாதிப்பு
வருவாய்துறையினர் போராட்டம் வருவாய் பணிகள் பாதிப்பு
வருவாய்துறையினர் போராட்டம் வருவாய் பணிகள் பாதிப்பு
ADDED : செப் 04, 2025 04:18 AM
சிவகங்கை: வருவாய்துறையினர் நேற்று 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கியதால், அலுவலக பணிகளில் பாதிப்பு, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களை பெற அலுவலர்கள் இன்றி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மாநில அளவில் காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு கூடுதல் ஆட்களை வழங்கி, தீர்வு காணும் நாட்களின் எண்ணிக்கையை 90 ஆக அதிகரிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கென தனியாக துணை தாசில்தார்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாசில்தார்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் இத்துறையில் 1841 பேர் பணி வேண்டிய இடத்தில், 1472 பேர் மட்டுமே பணிபுரிந்தனர். அவர்களில் 35 பேர் விடுப்பு, பயிற்சிக்கு சென்றுவிட்டனர். மாவட்ட அளவில் 238 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வருவாய்துறையினர் ஸ்டிரைக் காரணமாக நேற்று சிவகங்கை, சிங்கம்புணரி, சாக்கோட்டை, மானாமதுரை, திருப்புத்துார், தேவகோட்டையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு சென்ற மனுதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலை நிறுத்த போராட்டம் இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு வகித்தார். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் அசோக் குமார் நன்றி கூறினார்.