/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டிஜிட்டல் போர்டு இல்லாத ரயில்வே பிளாட்பாரம் மானாமதுரையில் அவதிடிஜிட்டல் போர்டு இல்லாத ரயில்வே பிளாட்பாரம் மானாமதுரையில் அவதி
டிஜிட்டல் போர்டு இல்லாத ரயில்வே பிளாட்பாரம் மானாமதுரையில் அவதி
டிஜிட்டல் போர்டு இல்லாத ரயில்வே பிளாட்பாரம் மானாமதுரையில் அவதி
டிஜிட்டல் போர்டு இல்லாத ரயில்வே பிளாட்பாரம் மானாமதுரையில் அவதி
ADDED : ஜன 29, 2024 05:34 AM

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு பெட்டிகளின் எண்களை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டு அமைக்க வேண்டுமென்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை ரயில்வே சந்திப்பிற்கு ஏராளமான ரயில்கள் தினமும் வந்து செல்கிறது. இங்கிருந்து சென்னை,திருப்பதி, செங்கோட்டை, அயோத்தி, வாரணாசி, ஹூப்ளி, பெங்களூரு, மதுரை, திருச்சி, விருதுநகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகள் ரயில் சென்று வருகின்றன.
இங்குள்ள 6க்கும் மேற்பட்ட பிளாட்பாரங்களிலிருந்து பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பிளாட்பாரங்களில் முன்பதிவு பெட்டிகளின் எண்களை தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் இல்லை.
பயணிகள் கூறுகையில், டிஜிட்டல் போர்டு இல்லாத காரணத்தினால் பயணிகள் முன்பதிவு பெட்டிகளை தேடி அலைய வேண்டியுள்ளது.
நள்ளிரவு நேரங்களில் வரும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை தேடி ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டு செல்லும் நிலை உள்ளது. ஆகவே மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் டிஜிட்டல் போர்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.