/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பராமரிப்புக்காக ரயில்வே கேட் மூடல் பஸ் இன்றி கிராம மக்கள் தவிப்பு பராமரிப்புக்காக ரயில்வே கேட் மூடல் பஸ் இன்றி கிராம மக்கள் தவிப்பு
பராமரிப்புக்காக ரயில்வே கேட் மூடல் பஸ் இன்றி கிராம மக்கள் தவிப்பு
பராமரிப்புக்காக ரயில்வே கேட் மூடல் பஸ் இன்றி கிராம மக்கள் தவிப்பு
பராமரிப்புக்காக ரயில்வே கேட் மூடல் பஸ் இன்றி கிராம மக்கள் தவிப்பு
ADDED : மார் 21, 2025 07:01 AM
திருப்புவனம் : ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை 19 தானியங்கி ரயில்வே கேட் உள்ளன.இவற்றில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணி நடப்பது வழக்கம்.
பராமரிப்பு பணிகளின் போது ரயில்வே நிர்வாகம்சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து விட்டு ரயில்வே கேட்டை மூடி பராமரிப்பு பணி மேற்கொள்கின்றனர். திடீரென கேட் மூடப்படுவதால் கிராமப்புற மக்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
நேற்று காலை டி.பாப்பான்குளம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது. இதனால் கொத்தங்குளம், சொரிக்குளம், பழையனூர் செல்லும் டவுன் பஸ்கள் நான்கு வழிச்சாலை விலக்கு வரை இயக்கப்பட்டது. கிராம மக்கள் இறங்கி நீண்ட துாரம் நடந்து சென்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், பராமரிப்பு பணிக்கு முதல் நாள் கேட் அருகே பராமரிப்பு பணி குறித்து போர்டு வைக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் வைத்தால் அதற்கு ஏற்ப மாற்று ஏற்பாடு செய்து கொள்வோம், அவசரத்திற்கு ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யும் டிராக்கிங் ரயில் நேற்று முன்தினம் இப்பாதையில் ஆய்வு செய்த போது 19 தானியங்கி ரயில்வே கேட்களில் பாப்பான்குளம் ரயில்வே கேட் விபத்து ஏற்படும் வகையில் இருப்பதாகவும் உடனடியாக சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டது.
எனவே கேட்டை மூடி பணி மேற்கொண்டு வருகிறோம், இப்பாதையில் மணல்குவாரிக்கு செல்லும் லாரிகள், கரும்புலோடு ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர் ஆகியவற்றால் ரயில்வே கேட் பகுதி பள்ளமாகி விட்டது.
எனவே காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை கேட் மூடப்பட்டு பணிகள் நடந்தது என்றனர்.