/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் ஸ்திரத்தன்மை இழந்தமுன்னாள் படை வீரர் நல கட்டடம் பொதுப்பணித்துறை நோட்டீஸ் சிவகங்கையில் ஸ்திரத்தன்மை இழந்தமுன்னாள் படை வீரர் நல கட்டடம் பொதுப்பணித்துறை நோட்டீஸ்
சிவகங்கையில் ஸ்திரத்தன்மை இழந்தமுன்னாள் படை வீரர் நல கட்டடம் பொதுப்பணித்துறை நோட்டீஸ்
சிவகங்கையில் ஸ்திரத்தன்மை இழந்தமுன்னாள் படை வீரர் நல கட்டடம் பொதுப்பணித்துறை நோட்டீஸ்
சிவகங்கையில் ஸ்திரத்தன்மை இழந்தமுன்னாள் படை வீரர் நல கட்டடம் பொதுப்பணித்துறை நோட்டீஸ்
ADDED : ஜூன் 05, 2025 01:23 AM

சிவகங்கை: சிவகங்கையில் கட்டடம் ஸ்திரத்தன்மையை இழந்து விட்டதால் முன்னாள் படை வீரர் நல அலுவலகம், அங்குள்ள மருத்துவமனையை மாற்றிக் கொள்ள பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு மகளிர் கல்லுாரி ரோட்டில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலக தரைத்தளத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான மருத்துவமனை, முதல் தளத்தில் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்குள்ள கட்டடம் கட்டி 40 ஆண்டிற்கு மேல் ஆனது. இதனால் நாளுக்கு நாள் இக்கட்டடம் சிதிலமடைந்து வந்தது.
இந்நிலையில் இக்கட்டடத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டடம் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து விட்டதால், உடனே அகற்றி கட்டடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளனர்.
முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை சத்தியமூர்த்தி தெருவிற்கு இடமாற்றம் செய்துவிட்டனர். தொடர்ந்து முன்னாள் படைவீரர், அவர்களது குடும்பத்தாருக்கான மருத்துவமனை மட்டும் செயல்பட்டு வருகிறது. அதையும் மாற்றுவதற்கு தற்காலிகமாக சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே தனியார் கட்டடத்தை வாடகைக்கு பிடித்துள்ளனர். விரைவில் இங்கிருந்து மருத்துவமனை இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
மருத்துவமனையை மாற்ற முடிவு
படைவீரர் நல அதிகாரி கூறியதாவது: சிவகங்கை 48 காலனி ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே 14 சென்ட் நிலம் ஒதுக்கியுள்ளனர். அந்த இடத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு அரசு ஒப்படைக்க வேண்டும். அதற்கு பின் நிதி ஒதுக்கி, மருத்துவமனை, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம் கட்டப்படும். அது வரை வாடகை கட்டடத்திற்கு மருத்துவமனையை மாற்றுவதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.