மடப்புரத்தில் மக்கள் தொடர்பு முகாம்
மடப்புரத்தில் மக்கள் தொடர்பு முகாம்
மடப்புரத்தில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : பிப் 11, 2024 12:28 AM
திருப்புவனம்: மடப்புரத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சபர்மதி கோபி வரவேற்றார். முகாமில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிராமமக்கள் கூறுகையில் 100 நாள் திட்ட பணியில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. முதியோர் ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என கலெக்டரிடம் மனு அளித்தனர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.