/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பராமரிப்பு இல்லாத பாலங்கள் பொதுமக்கள் அச்சம் பராமரிப்பு இல்லாத பாலங்கள் பொதுமக்கள் அச்சம்
பராமரிப்பு இல்லாத பாலங்கள் பொதுமக்கள் அச்சம்
பராமரிப்பு இல்லாத பாலங்கள் பொதுமக்கள் அச்சம்
பராமரிப்பு இல்லாத பாலங்கள் பொதுமக்கள் அச்சம்
ADDED : மே 23, 2025 11:47 PM
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் பலவும் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவின் பெரும்பாலான கிராமங்கள் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. பொதுமக்கள் ஆற்றை கடந்து தான் சென்று வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்புவனம், மணலூர், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட இடங்களில் வைகை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
திருப்புவனம் வைகை ஆற்றின் குறுக்கே 1998ல் ஆறு கோடியே 28 லட்ச ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள இடைவெளிகளில் மரங்கள் வளர்ந்துள்ளன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் பாலம் பராமரிக்கப்படாததால் சிறிய வாகனங்கள் சென்றால் கூட அதிர்வு ஏற்படுகின்றன. பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் செடிகள் வளர்வதால் பாலத்திலும் விரிசல் ஏற்பட்டு வருகின்றன. பாலத்தின் கைப்பிடி உள்ளிட்ட பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலமும் பராமரிப்பின்றி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.