/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம் மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்
மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்
மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்
மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 12, 2025 10:53 PM
இளையான்குடி; கீழாயூர் கிராமத்தில் சில மாதங்களாக அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட மின்தடை இரவு வரை நீடித்ததால் அப்பகுதி மக்கள் இரவு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து இளையான்குடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.