ADDED : மார் 25, 2025 09:53 PM
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகள் ரிபீனா 21, என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கும் திருமணமாகி 11 மாத மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சுப்பிரமணி அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். தற்போது 2 மாத கர்ப்பமாக இருந்த ரிபீனா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இளையான்குடி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் சுப்பிரமணியை கைது செய்தனர்.