/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானியத்துடன் கோழி பண்ணை ஜூன் 28க்குள் விண்ணப்பிக்கலாம் மானியத்துடன் கோழி பண்ணை ஜூன் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் கோழி பண்ணை ஜூன் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் கோழி பண்ணை ஜூன் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் கோழி பண்ணை ஜூன் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2025 11:30 PM
சிவகங்கை: நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் 50 சதவீத மானியத்துடன் பயன்பெற தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று ஜூன் 28க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
நாட்டுக் கோழி பண்ணை அமைக்க கோழிக் கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, நான்கு மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு, நான்கு வயதுடைய கோழிக்குஞ்சுகள் போன்றவற்றின் மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படுகிறது.
கோழிக்கொட்டகை அமைக்க குடியிருப்பு மற்றும் நீர் நிலைகளில் இருந்து விலகி இருக்கக் கூடிய குறைந்தபட்சம் 625 சதுர அடி சொந்த நிலம் இருக்க வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கனவே இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்ககூடாது. 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஆர்வமுள்ள நபர்கள் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் ஜூன் 28க்குள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு பயனாளிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 625 ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும்.
ஒரு பயனாளி 72 வாரங்கள் வரை நாட்டுக் கோழிகளை வளர்த்து ஆண்டுக்கு 10 ஆயிரம் முட்டைகள் உற்பத்தி செய்ய முடியும். குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். முட்டைகளை விற்கலாம். வளர்ந்த கோழிகள் மற்றும் சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். இவற்றின் வாயிலாக ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.