/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 'குண்டாசில்' 90 பேருக்கு சிறை 9 மாதங்களில் போலீஸ் நடவடிக்கை 'குண்டாசில்' 90 பேருக்கு சிறை 9 மாதங்களில் போலீஸ் நடவடிக்கை
'குண்டாசில்' 90 பேருக்கு சிறை 9 மாதங்களில் போலீஸ் நடவடிக்கை
'குண்டாசில்' 90 பேருக்கு சிறை 9 மாதங்களில் போலீஸ் நடவடிக்கை
'குண்டாசில்' 90 பேருக்கு சிறை 9 மாதங்களில் போலீஸ் நடவடிக்கை
ADDED : செப் 13, 2025 03:55 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொலை, வழிப்பறி நடைபெறாமல் தடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களில் 90 பேர் 'குண்டர் தடுப்பு காவல்' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் கொலை, வழிப்பறி, திருட்டு, சைபர் கிரைம் மோசடி போன்ற சம் பவங்களில் ஈடுபடு வோர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுத்து, மாவட்ட அளவில் குற்றச் சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்கும் நோக்கில், போலீசார் தொடர் வழிப்பறி, கொலை, திருட்டு, கஞ்சா விற்போர், அடிதடி சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து வருகின்றனர்.
தொடர்ந்து சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் அவர்களை கண்டறிந்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகின்றனர்.
2025 செப்.,10ம் தேதி வரை இம்மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி, அடிதடி சம்பவங்களில் ஈடுபட்ட 90 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
ஆசிரியரிடம் வழிப்பறி செய்தவருக்கு சிறை சிவகங்கை அருகே அழகுமெய்ஞானபுரத்தை சேர்ந்த சிறப்பாசிரியர் ரமேஷ்குமார் 40. இவர் ஆக.,11 அன்று செவல்புஞ்சை கிராம பள்ளிக்கு சென்றுவிட்டு, மதியம் 2:30 மணிக்கு டூவீலரில் திரும்பிய போது, மானா மதுரை அருகே முருக பாஞ்சானை சேர்ந்த அர்ச்சுணன் மகன் முனீஸ்வரன் 25, ஆசிரியரை வழிமறித்து அரிவாளால் தாக்கி அவரிடம் 3 பவுன் செயின், ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்தார். அவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் காளையார் கோவில் போலீசார் சிறையில் நேற்று முன்தினம் அடைத்துள்ளனர்.