Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாவட்டத்தில் 589 கண்மாய்களை சீரமைக்க திட்டம்; 2 கட்டமாக ரூ.45.80 கோடி ஒதுக்க முடிவு

மாவட்டத்தில் 589 கண்மாய்களை சீரமைக்க திட்டம்; 2 கட்டமாக ரூ.45.80 கோடி ஒதுக்க முடிவு

மாவட்டத்தில் 589 கண்மாய்களை சீரமைக்க திட்டம்; 2 கட்டமாக ரூ.45.80 கோடி ஒதுக்க முடிவு

மாவட்டத்தில் 589 கண்மாய்களை சீரமைக்க திட்டம்; 2 கட்டமாக ரூ.45.80 கோடி ஒதுக்க முடிவு

ADDED : செப் 18, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
மழை காலங்களில் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன கண்மாய்களில் மழை நீர் தேங்குவதன் மூலம் பாசன வசதி கிடைப்பதோடு கிராம மக்களுக்கு பிற பயன்பாட்டிற்கான தண்ணீர், கால்நடைகளுக்கு போதிய தண்ணீரை கண்மாய்களில் சேகரித்து வைக்க வேண்டும். இதற்காக சிறுபாசன கண்மாய்களை புத்துயிரூட்டும் பணிகளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள சிறு பாசன கண்மாய்களை தேர்வு செய்து, அக்கண்மாய்களுக்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றி இயந்திரங்கள் மூலம் கண்மாய் உட்பரப்பை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் 589 கண்மாய்கள் தேர்வு சிறுபாசன கண்மாய் புத்துயிரூட்டும் திட்டத்தின் கீழ் 2 கட்டமாக பணிகளை தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டது. 2024-25ம் ஆண்டிற்கென இம்மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 441 கண்மாய்களும், 2 ம் கட்டமாக 2025--2026 ம் ஆண்டிற்கென 148 கண்மாய்கள் என ஒட்டு மொத்தமாக 589 சிறுபாசன கண்மாய்கள் தேர்வு செய்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக எடுக்கப்பட்டுள்ள 441 கண்மாய்களில் 245 கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றி, கண்மாய் உட்பரப்பினை துார்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்துள்ளன. முதற்கட்டமாக நடக்கும் 441 கண்மாய்களை சீரமைக்க அரசு ரூ.34.30 கோடி ஒதுக்கியுள்ளது.

இரண்டாம் கட்டமாக (2025--2026) 148 கண்மாய்களை சீரமைக்க அரசு ரூ.11.50 கோடி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. சிறுபாசன கண்மாய் புத்துயிரூட்டும் திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள கண்மாய்களில் பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீர் சேகரமாகி, கண்மாய்களில் நீர் இருப்பு அதிகரிக்க செய்யும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us