/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள் நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள்
நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள்
நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள்
நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள்
ADDED : மே 13, 2025 07:15 AM

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை 6:45 மணிக்கு வெள்ளிக்குதிரையில் பெருமாள் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் எழுந்தருளினார்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மே 10 அன்று அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் சித்ராபவுர்ணமி பிரமோத்ஸவ விழா துவங்கியது.
மே 11 அன்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம்,காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுதல், வெள்ளி கேடயத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது.
நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:45 மணிக்கு வெள்ளி குதிரையில் வெண்பட்டு உடுத்தி வந்த பெருமாள் பூபாலன் பொட்டலில் ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் வெள்ளிகுதிரையில் வந்த பெருமாளை தரிசித்தனர்.
தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.