/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இரவு நேர மின் தடை; தவிக்கும் மக்கள் இரவு நேர மின் தடை; தவிக்கும் மக்கள்
இரவு நேர மின் தடை; தவிக்கும் மக்கள்
இரவு நேர மின் தடை; தவிக்கும் மக்கள்
இரவு நேர மின் தடை; தவிக்கும் மக்கள்
ADDED : செப் 10, 2025 07:55 AM
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கிராமங்களில் இரவு நேர மின்தடையால் மக்கள் தவிக்கின்றனர்.
கிருங்காக்கோட்டை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2 வாரமாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அறிவிக்கப்படாத மின்தடை செய்யப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பும் மாணவர்கள் பாடங்களை படிக்கவும், லேப்டாப், கணினியில் வேலை செய்யவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் பல இடங்களில் மரக்கிளைகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காரணமாக காற்று மழையால் அடிக்கடி மின்தடை ஏற்படும் நிலையில், அவற்றை உடனடியாக சீரமைத்து மின்வெட்டு இல்லாமல் மின்வினியோகத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.