/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குடிநீர் வசதி இல்லாததால் குமாரகுறிச்சி மக்கள் அவதி குடிநீர் வசதி இல்லாததால் குமாரகுறிச்சி மக்கள் அவதி
குடிநீர் வசதி இல்லாததால் குமாரகுறிச்சி மக்கள் அவதி
குடிநீர் வசதி இல்லாததால் குமாரகுறிச்சி மக்கள் அவதி
குடிநீர் வசதி இல்லாததால் குமாரகுறிச்சி மக்கள் அவதி
ADDED : ஜூலை 02, 2025 06:51 AM
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள குமாரகுறிச்சி கிராமத்தில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமாரகுறிச்சி கிராமத்தில் பல வருடங்களாக பல இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டும் அவை செயல்படாததால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இந்த ஊர் வழியாக சென்றாலும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.
சுகாதார வளாகங்களும் முழுமையாக செயல்படாத நிலையில் ஊரின் மத்தியில் உள்ள குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கழிவு நீர் வாய்க்கால் முறையாக கட்டப்படாததால் தெருக்களில் கழிவு நீர் ஓடி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
இக்கிராமத்தில் பலர் கால்நடை வளர்த்து வருவதால் கால்நடை மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும்.
மக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.