ADDED : செப் 16, 2025 04:20 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றவர்களை அதிகாரிகள் பல மணி நேரம் காக்க வைத்ததால் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காரைக்குடி மாநகராட்சி 27 வது வார்டில்,சாலை,கழிவு நீர் கால்வாய் உட்பட பல்வேறு பிரச்னை உள்ளது.பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால்,நேற்று அப்பகுதி கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர்.அவர்களை பல மணி நேரமாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்து கூச்சலிட்டனர்.
மேயர் முத்துத்துரை மற்றும் கமிஷனர் சங்கரன் வெளியே வந்து மக்களிடம் விளக்கம் கேட்டனர்.
இதில் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.மேயர் முத்துத்துரை அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.