ADDED : செப் 20, 2025 11:43 PM

காரைக்குடி: சாக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சாலையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரியகோட்டையில் இருந்து முள்ளங்காடு செல்லும் சாலை பல ஆண்டுகளாக கற்சாலையாக காட்சி அளிக்கிறது. தவிர அப்பகுதி மக்கள் வழிபடும் அய்யனார் கோயிலுக்கு செல்லும் முக்கியச் சாலையாகவும் உள்ளது. குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. சேதமடைந்த சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லாத நிலை நீடிக்கிறது.