/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது
நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது
நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது
நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது
ADDED : மே 24, 2025 08:22 PM
சிவகங்கை:சிவகங்கை, காமராஜர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 42. இவர், 2019ல், சகோதரர் மருத்துவ செலவிற்காக திருப்புத்துார் ரோடு, யோகநாத்முரளி, 43, என்பவருக்கு சொந்தமான அடகு கடையில், 70 சவரன் நகையை பல்வேறு தேதிகளில் அடகு வைத்து, 14 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
கடந்த, 2023ல் அடகு நகையை திருப்புவதற்கு மணிகண்டன் சென்றபோது, கடை மூடப்பட்டிருந்தது. உரிமையாளர் யோகநாத்முரளி வீட்டிற்கு சென்று அடகு நகை குறித்து கேட்டுள்ளார். அதற்கு, 'நகையை திருப்பி தர முடியாது' என, அவர் மிரட்டியுள்ளார். மணிகண்டன் புகாரில், யோகநாத்முரளியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.