/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி
ADDED : மே 15, 2025 05:00 AM

காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லாததால் சிரமப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். மருத்துவமனைக்கு மினி பஸ் இயக்க வேண்டுமென- மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு, காளவாய் பொட்டல், ரயில்வே ரோடு, அரியக்குடி, கணேசபுரம், இடையர் தெரு உட்பட காரைக்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள சூரக்குடி சாலையில் புதிய அரசு மருத்துவமனை செயல்பட தொடங்கியது. பழைய மருத்துவமனையில் இருந்த அனைத்து பிரிவுகளும் புதிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
மக்களின் கோரிக்கையை அடுத்து பழைய மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு காலையில் மட்டும் செயல் படுகிறது. அனைத்து தேவைக்கும் புதிய மருத்துவமனைக்கு மக்கள் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.
ஆனால் புதிய மருத்துவமனைக்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லை. காலையில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், மீண்டும் வீடு திரும்ப பல மணி நேரமாகி விடுகிறது. ஆட்டோவில் செல்ல ரூ.300 வரை கேட்பதாக தெரிவிக்கின்றனர். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனைக்கு வட்டப் பேருந்து, மினி பஸ் இயக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.