/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் பயிற்சி டாக்டர்களே சிகிச்சை நோயாளிகள் அதிருப்தி சிவகங்கையில் பயிற்சி டாக்டர்களே சிகிச்சை நோயாளிகள் அதிருப்தி
சிவகங்கையில் பயிற்சி டாக்டர்களே சிகிச்சை நோயாளிகள் அதிருப்தி
சிவகங்கையில் பயிற்சி டாக்டர்களே சிகிச்சை நோயாளிகள் அதிருப்தி
சிவகங்கையில் பயிற்சி டாக்டர்களே சிகிச்சை நோயாளிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 17, 2025 11:23 PM
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் பயிற்சி டாக்டர்களே பெரும்பாலும் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினசரி புறநோயாளிகள் பிரிவில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சர்க்கரை, பொது மருத்துவம், இதய கோளாறு, எலும்பு முறிவு சார்ந்த பிரச்னைகளுக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
புறநோயாளிகள் பிரிவில் பணியில் நிரந்தர டாக்டர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. மாறாக இங்கு பயிற்சி டாக்டர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
புறநோயாளிகள் பிரிவு காலை 7:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணிக்கு முடிவடைகிறது. இதில் நிரந்தர டாக்டர்கள் ஒரு சிலர் மட்டும் சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர்.
பயிற்சி டாக்டர்களால் இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்ளிட்டவற்றை பார்த்து தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. நோயாளிகளை வைத்துக்கொண்டே நிரந்தர டாக்டர்களுக்கு இ.சி.ஜி., எக்ஸ்ரேவை மொபைலில் படம் எடுத்து அனுப்பி சந்தேகம் கேட்டு சிகிச்சை அளிக்கின்றனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை குறித்தும் வழங்கும் மாத்திரை குறித்தும் அச்சம் அடைகின்றனர்.
மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றக்கூடிய அனைத்து டாக்டர்களும் பணிக்கு வரும்போதும் பணி முடிந்து செல்லும் போதும் தங்களது வருகையை கட்டாயம் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே வருகையை பதிவு செய்வதாகவும், பணி முடிந்து செல்லும் போது பதிவு செய்வதில்லை எனவும், சிலர் வருகை பதிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் வெளியே தங்களது கிளினிக்கிற்கு செல்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் புறநோயாளிகள் பிரிவில் நிரந்தர டாக்டர்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது: எந்த புகாரும் வரவில்லை என்றும் பணி நேரத்தில் டாக்டர்கள் அனைவரும் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணி நேரத்தில் வெளியே கிளினிக் செல்வோர் குறித்து புகார் எதுவும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.