Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பயணிகள் அவதி

திருப்புவனத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பயணிகள் அவதி

திருப்புவனத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பயணிகள் அவதி

திருப்புவனத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பயணிகள் அவதி

ADDED : செப் 01, 2025 02:16 AM


Google News
திருப்புவனம்,: திருப்புவனத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள், வியாபாரிகள், பயணிகள் என வந்து செல்லும் இடத்தில் சுகாதார வளாகம் இன்றி தவித்து வருகின்றனர்.

திருப்புவனம் நகரில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுதவிர சுற்றுவட்டார கிராமங்களிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். திருப்புவனத்தில் புஷ்பவனேஷ்வரர் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், திதி பொட்டல் என ஏராளமானவைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் பள்ளி, தனியார் பள்ளி என கல்வி நிறுவனங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வாரம்தோறும் செவ்வாய்கிழமை காய்கறி சந்தை, புதன் கிழமை மாட்டுச்சந்தை என தினசரி பொதுமக்கள் ஏராளமானோர் திருப்புவனம் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் திருப்புவனத்தில் சுகாதார வளாகம் ஏதும் இல்லை. மார்கெட் வீதியில் இருந்த ஒரே ஒரு சுகாதார வளாகமும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. புதிய சுகாதார வளாகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கப்படவில்லை. தினசரி திருப்புவனம் வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு வைகை ஆற்றினுள் சென்று வர வேண்டியுள்ளது. பெண்கள் பலரும் இயற்கை உபாதையை கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். சுகாதார வளாகம் இல்லாதது குறித்து பலரும் பேரூராட்சியிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவே இல்லை. வார, தினசரி, கால்நடை சந்தை என பேரூராட்சிக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக சுகாதார வளாகம் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மார்கெட் வீதியில் ஏற்கனவே சுகாதார வளாகம் இருந்த இடத்தில் போதிய இட வசதி இருந்தும் பேரூராட்சி அதிகாரிகள் கட்டுமான பணிக்கு அனுமதி தராமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

////





      Our Apps Available On




      Dinamalar

      Follow us