/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு
ADDED : செப் 09, 2025 04:06 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி காரணமாக இடித்து விட்டு கூடுதல் இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ளது.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் பல பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில் ஒரு வழியாக பழைய ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகேயுள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டு நேற்று காலை முதல் புதிய இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கியது.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சிறிது துாரம் என்பதால் பயணிகள் சிரமப்படும் நிலையில் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டதால் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே வெயிலில் பஸ்சுக்கு காத்திருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்களில் ஏறி செல்கின்றனர். இதனால் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அடிப்படை வசதிகளுக்கான ஒரு சில பணிகள் மட்டும் நடந்து உள்ளது. குடிநீரும், கழிப்பறையும் அமைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் நிழற் கூடம் சிறிய அளவில் ஒன்று உள்ளது. மேலும் இரண்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மரத்தடியில் நிழல் தேடி ஓடுகின்றனர்.
குடிநீர் வசதி செய்யப்பட்டு வந்தாலும் போதுமானதாக இல்லை. மக்களுக்கு தற்போது குடிநீர் தேவை அத்தியா வசியமாக உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் தொட்டி மட்டுமின்றி குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே ஏற்படுத்தி தண்ணீர் தாகத்தை போக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புக்களை தவிர்க்க நகராட்சியே தற்காலிக கடைகள் அமைத்து ஏற்கனவே கடை நடத்துபவர்களுக்கு வாடகைக்கு விடலாம். நகராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு மக்களின் தேவைகளை சரி செய்ய முடியும்.