/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி, மானாமதுரை வழி மதுரைக்கு பயணிகள் ரயில்; பொது மேலாளரிடம் மனு காரைக்குடி, மானாமதுரை வழி மதுரைக்கு பயணிகள் ரயில்; பொது மேலாளரிடம் மனு
காரைக்குடி, மானாமதுரை வழி மதுரைக்கு பயணிகள் ரயில்; பொது மேலாளரிடம் மனு
காரைக்குடி, மானாமதுரை வழி மதுரைக்கு பயணிகள் ரயில்; பொது மேலாளரிடம் மனு
காரைக்குடி, மானாமதுரை வழி மதுரைக்கு பயணிகள் ரயில்; பொது மேலாளரிடம் மனு
ADDED : மே 11, 2025 11:15 PM

காரைக்குடி : திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில் விடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை, ரயில்வே மேலாளரிடம் தொழில் வணிகக் கழகத்தினர் வழங்கினர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா ஆய்வுக்காக வந்திருந்தார். அவரை, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிட மணி, துணைத்தலைவர் சத்யமூர்த்திஉள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். அதில்,சென்னை-ராமேஸ்வரம்(போர்ட் மெயில்)எக்ஸ்பிரஸ் ரயிலை இரவு 9:40 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும். பாலக்காடு, கோவை, திருச்சி வரை பகலில் வரும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடி அல்லது ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்.திருவாரூரில் இருந்து காரைக்குடி,மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிதாக, பகல் நேர ரயில் தினமும் இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.