/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர் 9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்
9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்
9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்
9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்
ADDED : ஜூன் 12, 2025 10:51 PM
திருப்புவனம்; மாவட்டம் முழுவதும் எட்டாம் வகுப்பில் கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர்களை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதால் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு ஆர்வமாக சென்றுள்ளனர்.
கிராமங்களில் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர் ஒன்பதாம் வகுப்பில் சேர நகர்ப்புறங்களை நாடி வருகின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் சேர வரும் மாணவ, மாணவியர்களில் சிலருக்கு தமிழ்,ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியாததால் பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
தலைமையாசிரியர்கள் கூறுகையில்: எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில் 10 சதவிகித தோல்வியை மட்டுமே மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏற்று கொள்வார்கள், ஐம்பது சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்றால் தலைமையாசிரியர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும், ஒன்பதாம் வகுப்பில் சேர வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே எழுத படிக்க தெரியவில்லை.
இவர்களை வைத்து நாங்கள் எப்படி பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி காட்டுவது என கேள்வி எழுப்புகின்றனர்.