/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு தென்னை மரங்களை அகற்றிய அதிகாரிகள் லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு தென்னை மரங்களை அகற்றிய அதிகாரிகள்
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு தென்னை மரங்களை அகற்றிய அதிகாரிகள்
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு தென்னை மரங்களை அகற்றிய அதிகாரிகள்
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு தென்னை மரங்களை அகற்றிய அதிகாரிகள்
ADDED : மார் 14, 2025 07:35 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் ஒரே நேரத்தில் ஐந்து இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
60 ஏக்கர் பரப்பளவுள்ள லாடனேந்தல் கண்மாயை நம்பி 200ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை பணிகளால் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்த நிலையில் கண்மாய்க்கு தண்ணீரும் முறையாக வருவதில்லை. மழை தண்ணீரை நம்பியே குறைந்த பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. கண்மாயின் உட்புறம் 50 ஏக்கர் பரப்பளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்டவைகளை 40 வருடங்களாக பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். கண்மாயினுள் விவசாயம் செய்வதால் கண்மாயில் தண்ணீர் தேக்க முடிவதில்லை என கூறி சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ததையடுத்து கடந்தாண்டு ஜனவரியில் கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
விவசாயிகள் பலரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்ததையடுத்து பணிகள் பாதிக்கப்பட்டன. இதுவரை நான்காயிரம் தென்னை மரங்களை பொதுப்பணித்துறை வேருடன் பிடுங்கி அகற்றியுள்ளனர். இன்னும் நான்கு நாட்களில் மீதியுள்ள இரண்டாயிரம் மரங்களையும் அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இயந்திரங்களுடன் இறங்கி தென்னை மரங்களை வேருடன் அகற்றி வருகின்றனர்.