ADDED : செப் 12, 2025 04:23 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நடைபெற்றது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி வரவேற்றார். இக்கருத்தரங்கில் அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணையம், கணினி தமிழ், மொழி பெயர்ப்பும் கலை சொல்லாக்கம், மொழிப்பயிற்சி, அலுவலக குறிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், கவிஞர் திருப்பதி, புலவர் காளிராசா, செல்வக்குமார், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், செந்தில்முருகன், செயம்கொண்டான், ஆசிரியர் சுந்தர், கண்ணதாசன், சிதம்பரம் உட்பட அரசு பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். அரசு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றினை கலெக்டர் வழங்கினார்.