/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி-அறந்தாங்கி சாலையில் பதம் பார்க்கும் கருவேல மரங்கள் காரைக்குடி-அறந்தாங்கி சாலையில் பதம் பார்க்கும் கருவேல மரங்கள்
காரைக்குடி-அறந்தாங்கி சாலையில் பதம் பார்க்கும் கருவேல மரங்கள்
காரைக்குடி-அறந்தாங்கி சாலையில் பதம் பார்க்கும் கருவேல மரங்கள்
காரைக்குடி-அறந்தாங்கி சாலையில் பதம் பார்க்கும் கருவேல மரங்கள்
ADDED : மே 22, 2025 12:14 AM

காரைக்குடி:காரைக்குடி அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை செல்லும் முக்கிய சாலையாக கோட்டையூர் சாலை உள்ளது. தவிர புதுவயல் கண்டனுார் பள்ளத்துார் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு தினமும் ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. மேலும் காரைக்குடி பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரும், வேலைக்கு செல்பவர்களும் இச்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டையூர் செல்லும் நெடுஞ்சாலை நுழைவு வாயிலின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. வளைவு பகுதியான இச்சாலையில் கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.