ஓ.சிறுவயலில் ரோடு இல்லாததால் அவதி
ஓ.சிறுவயலில் ரோடு இல்லாததால் அவதி
ஓ.சிறுவயலில் ரோடு இல்லாததால் அவதி
ADDED : மே 27, 2025 12:56 AM

காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஓ. சிறுவயல் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முக்கிய சுற்றுலா தலமாக உள்ள ஆத்தங்குடி, பலவான்குடி, பிள்ளையார்பட்டி செல்லும் முக்கிய சாலையாக இப்பகுதி உள்ளது.
தவிர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பாரம்பரிய செட்டிநாட்டு வீடுகளை பார்வையிட இப்பகுதிக்கு வருகின்றனர். இங்குள்ள கமலா நேரு தெரு உட்பட ஊராட்சியின் பல்வேறு தெருக்களில் சாலை மற்றும் கழிவு நீர்க்கால்வாய் வசதியில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், புதிய சாலை அமைக்காததால் சாலைகள் மண்சாலையாகவும், கற் சாலையாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும்.