ADDED : செப் 08, 2025 06:20 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே மேலசாலுார், நாட்டரசன்கோட்டை அருகே கவுரிபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இம்மஞ்சுவிரட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாடுகள் பங்கேற்றன. 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாட்டிற்கும் 20 நிமிடம் வீதம் ஒதுக்கி, வீரர்கள் இறக்கி விடப்படுவர். காளையை அடக்கும் வீரர்களுக்கும், அடங்காத காளை உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.