ADDED : ஜூன் 12, 2025 10:48 PM
இளையான்குடி; இளையாங்குடி அருகில் உள்ள சாத்தனுார் கிராமத்திலிருந்து ராமநாதபுரம், ஆர்.எஸ்.,மங்கலம், சாத்தனுார், இளையான்குடி,சிவகங்கை,மதுரை வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ., தமிழரசி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன், கிளை மேலாளர் ரத்தினம், நிர்வாகிகள் கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் குழந்தை பாண்டியன் கலந்து கொண்டனர்.