ADDED : செப் 04, 2025 04:25 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே அல்லுார் வி.ஏ.ஓ., வீராணி கண்மாய் பகுதியில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தாலுகா போலீசார் வீராணி கண்மாய் பகுதிக்கு சென்றனர். அங்கு பனங்காடி சஞ்சிவ்குமார் 31, நாட்டரசன்கோட்டை ராகுல் 24, புதுக்குளம் முருகன் 40, பனங்காடி விக்னேஷ்வரன் 25 ஆகியோர் லாரியில் மண் அள்ளியுள்ளனர்.
சஞ்சிவ்குமார், ராகுலை கைது செய்து லாரி மற்றும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.