ADDED : ஜன 19, 2024 05:06 AM

திருப்புவனம்: திருப்புவனம் செல்லப்பனேந்தல் விலக்கு அருகே வைகை ஆற்றை ஒட்டி கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் தீ வைத்ததால் ரோடு முழுவதும் அடர்த்தியான புகை கிளம்பி சாலையை மறைத்தது.
காலை நேரம் என்பதால் பள்ளி வாகனங்கள், உள்ளிட்ட பல வாகனங்களும் புகையால் அந்த இடத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்டன.
மேலும் புகையினால் மாணவ, மாணவிகள் பலரும் மூச்சுதிணறலால் அவதிப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் குப்பைகளை கொட்ட தனி இடம் தேர்வு செய்து குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


