Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மருத்துவ மலர் கட்டுரை (1) குழந்தையின்மையா? ஷிவானி கருத்தரிப்பு மையம்

மருத்துவ மலர் கட்டுரை (1) குழந்தையின்மையா? ஷிவானி கருத்தரிப்பு மையம்

மருத்துவ மலர் கட்டுரை (1) குழந்தையின்மையா? ஷிவானி கருத்தரிப்பு மையம்

மருத்துவ மலர் கட்டுரை (1) குழந்தையின்மையா? ஷிவானி கருத்தரிப்பு மையம்

ADDED : ஜூன் 30, 2025 04:25 AM


Google News
காரைக்குடி ஷிவானி கருத்தரிப்பு மையம், தம்பிரான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் உமா சோமசுந்தரம் கூறியதாவது:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10 ஆண்டுகளுக்கு முன் குழந்தையின்மை 15 சதவீதத்திலிருந்து சமீப காலத்தில் 30 -முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குழந்தையின்மைக்கு காரணம் 30 சதவீதம் ஆண்கள், 30 சதவீதம் பெண்கள், 30 சதவீதம் இருபாலரும் 30 சதவீதம், 10 சதவீதம் என்ன காரணம் என்று அறிய முடியாத சூழ்நிலை ஆகும். மேலும் ஹார்மோன்ஸ் பிரச்சனைகளும் ஒரு காரணமாகும். தவிர, தவறான உணவு பழக்க வழக்கங்கள், குழந்தை பேறு தள்ளி போடுதல், தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவையும் முக்கிய காரணமாகும்.

பெண்களின் குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்கள்:

1. சினைப்பை கோளாறுகள், ஹார்மோன் பிரச்னைகள், சீரற்ற மாதவிடாய், முகப்பரு, அதிகப்படியான முடி வளருதல், எடை அதிகரித்தல், சினைப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகள்.

2. கருக்குழாய் அடைப்பு

3. கருப்பைப் பிரச்சினைகள்

4. கருப்பை அகபடலம் சரிவர வளராமல் இருப்பது, கருப்பை திசுக்கட்டிகள்.

பெண்கள் குழந்தையின்மை கண்டறிதல் :

1. முழு உடல் பரிசோதனை

2. ஹார்மோன் சோதனைகள்.

3. ஸ்கேன்

4. கருக்குழாய் ஆய்வு

5. லேப்ரோஸ்கோபி

6. மரபணு சோதனை

பெண்கள் குழந்தையின்மை சிகிச்சை முறைகள்:

1. மாதவிடாய் சீராக்குதல், மாத்திரை உட்கொள்ளுதல்.

2. மலட்டுத்தன்மைக்கான காரணிகளை ஹிஸ்டரோஸ்கோபி லேப்ரோஸ்கோபி மூலம் சரிசெய்தல்.

3. தேவைப்படும்போது ஐ.யு.வி., ஐ.வி.எப்., ஒன்று சிகிச்சை முறைகளை கையாளுதல்.

ஷிவானி கருத்தரிப்பு மையத்தில் கருவாக்கு அறையின் உள்கட்டமைப்பு, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு சிகிச்சை அளிப்பதனால் அதிகப்படியான வெற்றி வாய்ப்பு கிடைக்கிறது. எங்கள் மருத்துவமனையின் நோக்கம் தம்பதியருக்கு அடிப்படை சோதனை செய்து பிரச்சனைகளை கண்டறிந்து எளிய முறையில் குறைந்த செலவில் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஐ.வி.எப்., மூலமாக கருத்தரிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு ஆரோக்கியமான தாய் சேய் நலம் காப்பதில் பெருமை அடைகிறோம்.

////





      Our Apps Available On




      Dinamalar

      Follow us