ADDED : மார் 19, 2025 05:40 AM

திருப்புவனம், : திருப்புவனத்தில் கிலோ 80 ரூபாய்க்கு இலந்தைப்பழம் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்களில் முக்கியமானது இலந்தைப்பழம், சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பழம் இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையுடையது. கோடை காலமான மார்ச் முதல் மே வரை இவை கிடைக்கும்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விளையும் பெரிய இலந்தைப்பழத்தில் சுவை அவ்வளவாக இருக்காது.
இந்த சிறிய இலந்தைப்பழத்தின் சுவை நன்றாக இருக்கும் என்பதால் பலரும் விரும்பி வாங்குவார்கள்.