/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை அரசு கல்லுாரிக்கு தாயமங்கலம் ரோட்டில் இடம் 5 துறைகளுடன் வரும் கல்லுாரி மானாமதுரை அரசு கல்லுாரிக்கு தாயமங்கலம் ரோட்டில் இடம் 5 துறைகளுடன் வரும் கல்லுாரி
மானாமதுரை அரசு கல்லுாரிக்கு தாயமங்கலம் ரோட்டில் இடம் 5 துறைகளுடன் வரும் கல்லுாரி
மானாமதுரை அரசு கல்லுாரிக்கு தாயமங்கலம் ரோட்டில் இடம் 5 துறைகளுடன் வரும் கல்லுாரி
மானாமதுரை அரசு கல்லுாரிக்கு தாயமங்கலம் ரோட்டில் இடம் 5 துறைகளுடன் வரும் கல்லுாரி
ADDED : மார் 21, 2025 06:07 AM
சிவகங்கை : தமிழக பட்ஜெட்டில் மாநில அளவில் புதிதாக 10 அரசு கல்லுாரிகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசு கல்லுாரி துவக்கப்பட உள்ளது.
மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் இருந்து ஆண்டு தோறும் சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரிக்கு 1200க்கும் மேற்பட்ட மாணவிகள்சென்று வருகின்றனர்.
இவர்களின் சிரமம்தவிர்க்க, மானாமதுரையில் அரசு மகளிர் கல்லுாரி தான் வேண்டும் என மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.
வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மானாமதுரையில் அரசு கல்லுாரி துவக்க, தற்காலிகமாக ராஜகம்பீரம் அருகே ஐ.டி.ஐ., கட்டடத்தில் இடம் தேர்வு செய்ய உள்ளோம். தாயமங்கலம் ரோட்டில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்திற்கு எதிரே உள்ள புறம்போக்கு இடத்தில் கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும். தற்போது 5 துறையுடன் அரசு மகளிர் கல்லுாரி துவக்கப்படலாம் என தெரிவிக்கின்றனர், என்றார்.