ADDED : செப் 13, 2025 11:33 PM
சிவகங்கை: சிவகங்கை வடக்குராஜா வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் 67. இவர் அதே பகுதியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உழவர் சந்தை அருகே சிமென்ட் கோடவுன் உள்ளது.
நேற்று முன்தினம் இவரது கடையில் ஏற் கனவே வேலை பார்த்த அம்பேத்கர் தெருவை சேர்ந்த குமார் 52 என் பவர் கோடவுனை திறந்து 20 சிமென்ட் மூடையை எடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் தகவல் கூற அங்கு சென்ற மாரியப்பன் குமாரை வாகனத்துடன் பிடித்து நகர் குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.