/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பால் பூத் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.19.41 லட்சம் ஏமாற்றியவர் கைது பால் பூத் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.19.41 லட்சம் ஏமாற்றியவர் கைது
பால் பூத் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.19.41 லட்சம் ஏமாற்றியவர் கைது
பால் பூத் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.19.41 லட்சம் ஏமாற்றியவர் கைது
பால் பூத் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.19.41 லட்சம் ஏமாற்றியவர் கைது
ADDED : மார் 19, 2025 03:03 AM
சிவகங்கை:காரைக்குடியில் ஆவின் பால் பூத் உரிமம் பெற்று தருவதாக கூறி ரூ.19.41 லட்சம் பெற்று ஏமாற்றிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் பாலகுமார். அடையாளம் தெரியாத ஒருவர் இவரை தொடர்பு கொண்டு தான் ஆவின் மேனேஜர் எனவும் ரூ.2 லட்சம் கட்டினால் பால் பூத் ஏஜன்சி பெற்று தருவதாக கூறியுள்ளார். பாலகுமார் உள்ளிட்ட 11 பேர் அவரை நம்பி ரூ.19 லட்சத்து 41 ஆயிரம் கொடுத்துள்ளனர். ஆனால் உரிமம் வழங்காததால் பாலகுமார் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே உதிரமாடன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ்குமாரை 45 கைது செய்தனர்.