Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் வருவாய் இழப்பு: சிலர் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதால்

கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் வருவாய் இழப்பு: சிலர் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதால்

கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் வருவாய் இழப்பு: சிலர் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதால்

கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் வருவாய் இழப்பு: சிலர் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதால்

ADDED : மே 31, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
இத்தாலுகாவில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம், ஜமீன் கண்மாய்கள் என 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கண்மாய்கள், குளங்கள் உள்ளன. இக்கண்மாய்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத நாட்டுக் கருவேல மரங்கள் மட்டுமே வளர்ந்திருக்கும். அவை மண்ணரிப்பை தடுக்க உதவியதால் வெட்ட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில வருடங்களாக அனைத்து கண்மாய்களிலும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளரத் தொடங்கின. அவற்றை அரசுத் துறையினர் ஏலம் விட்டு வருகின்றனர்.

ஆனால் தனிநபர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து பிறருக்கு அதை மாற்றி பணம் சம்பாதித்து வருகின்றனர். இதற்காகவே அவர்கள் கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதுடன், அச்செடிகளை பொதுமக்கள் பிடுங்கி எறிய தடையும் விதிக்கின்றனர். இம்மரங்கள் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் அரசுத்துறை மூலம் ஏலம் விடப்படும்.

வேறு யாரும் ஏலம் கேட்காதவாறு சிண்டிகேட் அமைத்துக் கொண்டு குறைந்த விலைக்கு தனி நபர்கள் ஏலம் எடுக்கின்றனர். குறிப்பிட்ட தொகையை கிராமத்திற்கு கொடுப்பதாக சொல்லிவிட்டு பல மடங்கு கூடுதல் தொகைக்கு வேறு நபர்களுக்கு கைமாற்றி விற்கின்றனர். இதில் கிடைக்கும் தொகையை கிராமத்திற்கும் பயன்படுத்தாமல் ஊராட்சிகளுக்கும் பயன்படுத்தாமல் தனி நபர்களே பல வருடங்களாக அனுபவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அரசுக்கு தொடர் இழப்பும் ஏற்படுகிறது. இதற்கிடையில் கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்வதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மற்றொருபுறம் கோயில்மாடுகளும், காட்டு மாடுகளும் சீமைக்கருவேல புதருக்குள் பகல் நேரங்களில் ஒளிந்து கொண்டு இரவு நேரங்களில் வயல்களுக்குள் வந்து பயிர்களை நாசம் செய்கிறது.

கண்மாய்க்குள் சீமைக் கருவேல மரங்கள் வளராமல் ஆரம்பத்திலேயே அவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினாலும், ஏலத்தொகையை நம்பியிருக்கும் தனி நபர்களுக்காக அம்மரங்கள் வெட்டப்படுவது கிடையாது.

இம்மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து ஏலம் விடப்பட்டாலும் அதன் மூலம் அரசுக்கு சொற்ப வருமானமாகவே கிடைக்கிறது. தனி நபர்களுக்கு தான் முழுப்பலனும் சென்று சேர்கிறது. எனவே அனைத்து கண்மாய்களிலும் இவ்வகை மரங்கள் வளராமல் அந்தந்த ஊராட்சி நிர்வாகம், வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மூலம் அவ்வப்போது வெட்டி அகற்றி விட்டால் தண்ணீர் தேங்கும் பரப்பு அதிகரிப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது. எனவே கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us