Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முடக்கம்: சிங்கம்புணரியில் ஒப்பந்தகாரர்களின் நிதி பணிகள் முடித்தும் விடுவிக்காததால் தவிப்பு

முடக்கம்: சிங்கம்புணரியில் ஒப்பந்தகாரர்களின் நிதி பணிகள் முடித்தும் விடுவிக்காததால் தவிப்பு

முடக்கம்: சிங்கம்புணரியில் ஒப்பந்தகாரர்களின் நிதி பணிகள் முடித்தும் விடுவிக்காததால் தவிப்பு

முடக்கம்: சிங்கம்புணரியில் ஒப்பந்தகாரர்களின் நிதி பணிகள் முடித்தும் விடுவிக்காததால் தவிப்பு

ADDED : செப் 05, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
இவ்வொன்றியத்தில் 30 ஊராட்சிகளில் பல்வேறு அரசு திட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் பேவர் பிளாக், சிமென்ட் சாலை, கண்மாய் சீரமைப்பு உள்ளிட்டவற்றில் மறைமுக பணிகள் ஒதுக்கப்பட்டது. இதில் வேலை உறுதித் திட்ட ஊழியர்களின் ஊதியம் போக, ஒப்பந்தகாரர்கள் செலவழித்த கட்டுமான பொருட்கள், வாகன வாடகை உள்ளிட்டவற்றிற்கு கடந்தாண்டு ஆக., வரை பணம் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கு 10 மாதங்களாக நிதி வழங்கப்படவில்லை. பணிகளை முடித்து கொடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் முடங்கிப் போய் உள்ளது. இதனால் அடுத்த பணிகளை செயல்படுத்துவதற்கு நிதி இல்லாமல் ஒப்பந்தகாரர்கள் தவிக்கின்றனர்.

ஏற்கனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவுற்று, விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பும் வந்து விடும் என்பதால் தாங்கள் செலவழித்த பணத்தின் கதி என்ன என்று தெரியாமல் ஒப்பந்தக்காரர்கள் புலம்புகின்றனர். இதனால் ஒன்றியத்தில் அடுத்தடுத்து வரும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ

3000 கோடி ஒதுக்கிய நிலையில் திட்டப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதியம் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் பணிகளை முடித்து கொடுத்த தங்களுக்குரிய நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க ஒப்பந்தக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us