ADDED : மார் 19, 2025 05:33 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் குறுவை சாகுபடி தீவிரமடைந்துள்ளது.
இத்தாலுகாவில் கடந்தாண்டு பெய்த பருவமழையால் ஆறுகளில் தண்ணீர் ஓடி பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. இதனால் பல இடங்களில் விவசாயம் திருப்திகரமாக இருந்தது. தற்போது அறுவடை முடிந்தும் சில கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை துவக்கியுள்ளனர். பிரான்மலை, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடைப்பயிராக சாகுபடி செய்துள்ளனர். கடந்த வாரம் பெய்த மழை காரணமாக தற்போது பயிர்கள் செழித்து வளர துவங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த அறுவடையின் போது ஏற்பட்ட நஷ்டத்தை இச்சாகுபடி மூலம் சரிகட்டலாம் என்பது விவசாயிகளை நம்பிக்கையாக உள்ளது.