ADDED : செப் 08, 2025 06:21 AM
காரைக்குடி : காரைக்குடி அருகே வடகுடி நெல்லியாண்டவர், ஓசை மணி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இங்கு செப்., 5 ல் அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, முதற்கால, இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜை, வேதபாராயணம் நடந்தது நேற்று காலை, மண்டப சாந்தி, லட்சுமி பூஜை மற்றும் கடம் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து விமான கலச கும்பாபிஷேக விழா நடந்தது. நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.