/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி இழுபறி ; பயணிகள் அவதி காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி இழுபறி ; பயணிகள் அவதி
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி இழுபறி ; பயணிகள் அவதி
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி இழுபறி ; பயணிகள் அவதி
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி இழுபறி ; பயணிகள் அவதி
ADDED : ஜூன் 23, 2025 05:57 AM

காரைக்குடி : காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில், நடந்து வரும் புதுப்பிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1987 ல் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூரூ, கோயம்புத்துாருக்கு பஸ்கள் செல்கிறது. மேலும் புதுவயல், கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட சுற்று பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. தினமும் அதிக பயணிகள் வந்து செல்லும் பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததோடு கட்டடம் சேதமடைந்து காணப்பட்டன. இந்த பஸ் ஸ்டாண்டை புனரமைக்க 2023 ல் ரூ.3.95 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 1.5 ஆண்டை கடந்தநிலையில் பணிகள் இழுபறியாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
///