/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருமணத்திற்கு வாங்கிய நகைகள் ரூ. 3 லட்சம் கருகி சேதம் திருமணத்திற்கு வாங்கிய நகைகள் ரூ. 3 லட்சம் கருகி சேதம்
திருமணத்திற்கு வாங்கிய நகைகள் ரூ. 3 லட்சம் கருகி சேதம்
திருமணத்திற்கு வாங்கிய நகைகள் ரூ. 3 லட்சம் கருகி சேதம்
திருமணத்திற்கு வாங்கிய நகைகள் ரூ. 3 லட்சம் கருகி சேதம்
ADDED : மே 28, 2025 02:34 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஓட்டு வீட்டில் தீ பிடித்ததில் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த தங்க நகைகள்,பணம் கருகியதால் குடும்பத்தினர் கதறினர்.
திருப்புவனம் புதுார் பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் அங்குச்சாமி . திண்டுக்கல்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது சகோதரர் கண்ணன். இங்கு இருவரது ஓட்டு வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மாலை 4:30 மணியளவில் அங்குச்சாமி வீட்டில் காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த துணியில் தீ பற்றியுள்ளது. பின்னர் தீ பரவி சிலிண்டர் ரப்பர் டியூப் கருகி காஸ் வெளியேறி தீ மளமளவென ஓட்டு வீட்டின் மேல்பகுதியிலும் பற்றி எரிந்தது.
காற்று பலமாக வீசியதால் தீ மேலும் பரவி வீட்டிற்குள் இருந்த துணிகள், பீரோ உள்ளிட்டவைகள் எரிந்தன.
அங்குச்சாமி மூத்த மகளுக்கு ஜூன் 6 ல் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக வாங்கி வைத்திருந்த புது சேலை, தங்க நகைகள் தீயில் கருகின. விழாவிற்காக வைத்திருந்த ரூ. 3 லட்சத்தின் ஒரு பகுதியும் எரிந்தது.அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். அங்கிருந்த இரும்பு பீரோவை தீயணைப்பு துறையினர் உடைத்து உள்ளே மீதி இருந்த பணம், நகையை உள்ளிட்டவற்றை மீட்டனர். தீவிபத்து நடந்த இரு வீட்டிலும் மூன்று காஸ் சிலிண்டர்கள் இருந்தன. நல்வாய்ப்பாக எதுவும் வெடிக்க வில்லை.