ADDED : செப் 01, 2025 02:25 AM
சிவகங்கை: -சிவகங்கையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். தீர்மானம்: செப்., 8 ல் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திறள் முறையீடு போராட்டம் நடத்துவது. அரசு ஊழியர், ஆசிரியர்களில் காளையார்கோவில், சிங்கம்புணரி, திருப்புத்துார், மானாமதுரை, சிவகங்கையில் பணிபுரிவோருக்கு வீட்டு வாடகை படி குறைவாக உள்ளதை சரி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். ///