/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்தல் முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 06:44 AM
சிவகங்கை : திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ.,யை வெட்டி கொலை செய்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
விருப்ப ஓய்வு எஸ்.ஐ., ஜாகிர் உசேன் 60, மார்ச் 18 அன்று திருநெல்வேலியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி கொலையில் தொடர்புள்ளவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் இஸ்லாமிய கூட்டமைப்பினர் கூடினர். கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துகழுவனிடம் மனு அளித்தனர்.
கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் காஜாமைதீன், ஆதம் பள்ளிவாசல் பொருளாளர் ஹக்கீம், இந்திராநகர் ஹவ்வா ஜிம்மா பள்ளி தலைவர் தாஜ்தீன், எஸ்.டி.பி.ஐ., நகர் துணை தலைவர் முகம்மது இம்தியாஸ், இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் சேக் முகம்மது உட்பட த.மு.மு.க., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.