ADDED : ஜூன் 19, 2025 02:39 AM

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒருங்கிணைந்த தாய் சேய் நல பேறுகால பிரிவில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் சத்யபாமா தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பொறுப்பு ரமேஷ் பாபு, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றல், மகப்பேறு துறை பொறுப்பு துறை தலைவர் நாகசுதா, இணைப்பேராசிரியர் தென்னரசி பேசினர். கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.