/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் புதிய விளக்கு பொருத்தும் பணிசிவகங்கையில் புதிய விளக்கு பொருத்தும் பணி
சிவகங்கையில் புதிய விளக்கு பொருத்தும் பணி
சிவகங்கையில் புதிய விளக்கு பொருத்தும் பணி
சிவகங்கையில் புதிய விளக்கு பொருத்தும் பணி
ADDED : ஜன 11, 2024 04:04 AM
சிவகங்கை, : சிவகங்கையில் பல்வேறு இடங்களில் தெருவிளக்கு மாற்றும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக மின்தடை செய்யப்படுகிறது. மின் தடை குறித்து முன்னறிவிப்பு எதுவும் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 50 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து தெருக்களிலும் பழைய தெருவிளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 2 ஆயிரத்து 56 எல்.இ.டி., பல்பு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தந்த பகுதியில் பணி நடக்கும் போது சிவகங்கை நகராட்சி சார்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு எல்.இ.டி., பல்பு மாற்றும்பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு முதல்நாளே மின்தடை ஏற்படுத்துவது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நகராட்சி கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், சிவகங்கை நகராட்சி சார்பில் 27 வார்டுகளிலும் புதிய எல்.இ.டி., பல்பு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மின்வாரியத்திடம் உரிய அனுமதி பெற்று வேலை நடைபெறும் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பணியை மேற்கொள்கிறோம். அதனால் மின்சாரம் தடை ஏற்படுகிறது. இன்னும் 500 பல்பு பொருத்த வேண்டியுள்ளது. இரண்டு தினங்களில் இந்தப் பணி முடிந்து விடும் என்றார்.
மின்வாரிய துணைப் பொறியாளர் ஜிக்கி ராணி கூறுகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் எல்.இ.டி., பல்பு பொருத்துவதற்கு டிரான்ஸ்பார்மர்களின் மின் இணைப்பு துண்டிப்பதற்கு அனுமதி பெற்றுஉள்ளனர். எவ்வளவு நாள் இந்த பணி நடைபெறும் என்று தெரியவில்லை.
நகராட்சி நிர்வாகம் தான் இந்த பணியை செய்து வருகிறது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி மறுத்து வருகிறோம் என்றார்.