/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஊராட்சி குப்பை எரிவதால் புகை மூட்டம் அதிகரிப்புஊராட்சி குப்பை எரிவதால் புகை மூட்டம் அதிகரிப்பு
ஊராட்சி குப்பை எரிவதால் புகை மூட்டம் அதிகரிப்பு
ஊராட்சி குப்பை எரிவதால் புகை மூட்டம் அதிகரிப்பு
ஊராட்சி குப்பை எரிவதால் புகை மூட்டம் அதிகரிப்பு
ADDED : ஜன 08, 2024 06:06 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஊராட்சியில் எரிக்கப்படும் குப்பைகளால் நகர் பகுதி மக்களும் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட் பட்ட குறிஞ்சி நகர், முத்துவடுகநாதர் நகர், வேட்டையன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் சிங்கம்புணரி பேரூராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து 3 கி.மீ., தூரமுள்ள அணைக் கரைப்பட்டி ஊராட்சிக்கு கொண்டு சென்று கையாள 3 சக்கர வாகனமும், துாய்மை பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குப்பைக்கிடங்கு தூரமாக உள்ளதாலும் வாகனத்தில் குப்பைகளை கொண்டு செல்ல முடியாததாலும் நகர் பகுதியில் ஒட்டிய இடங்களில் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களும் புகையால் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே நகர் பகுதியை ஒட்டிய ஊராட்சி பகுதியில் தனியாக குப்பை கிடங்கு அமைத்து பராமரிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.