/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை நகராட்சியில் ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் புகார் கொடுத்து மாற்றிட வழி செய்த ஊழியர்கள்சிவகங்கை நகராட்சியில் ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் புகார் கொடுத்து மாற்றிட வழி செய்த ஊழியர்கள்
சிவகங்கை நகராட்சியில் ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் புகார் கொடுத்து மாற்றிட வழி செய்த ஊழியர்கள்
சிவகங்கை நகராட்சியில் ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் புகார் கொடுத்து மாற்றிட வழி செய்த ஊழியர்கள்
சிவகங்கை நகராட்சியில் ஓராண்டில் மூன்று கமிஷனர்கள் புகார் கொடுத்து மாற்றிட வழி செய்த ஊழியர்கள்
ADDED : ஜன 11, 2024 01:09 AM
சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் ஓராண்டில் இரண்டு கமிஷனர்கள் மாற்றப்பட்டு, மூன்றாவது கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். ஊழியர்களே புகார் கொடுத்து கமிஷனரை இடமாற்ற வழி ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.-
இதற்கிடையில் ஊழியர்களில் 3 பேர் பணிக்கு வராமல் வேறு நபர்களை பணியமர்த்தி ரூ.10 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கியதும் தெரிய வந்துள்ளது.
சிவகங்கை 1964ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1985ல் மாவட்டத் தலைநகராக சிவகங்கை அறிவிக்கப்பட்டது.
வரி வருவாயை அதிகரிக்க விரிவாக்க பகுதிகளை இணைக்க நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டதன்படி காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகள் கொட்டக்குடி கீழ்பாத்தி ஊராட்சியில் உள்ள கொட்டகுடி, சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சி ராகிணிப்பட்டி, பையூர், இடையமேலுார் ஊராட்சி காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வார்டுகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் இத்திட்டம் அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த 2014ல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகராட்சியில் தற்போது கடும் நிதி நெருக்கடி உள்ளது. கமிஷனர் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை 250 பேர் பணிபுரிகின்றனர்.
கூட்டுறவு வங்கிகளில் ஊழியர்கள் பெற்ற கடன் தவணை தொகையை ஊழியர்களிடம் வசூலித்தும், நகராட்சி நிர்வாகம் அந்த தொகையை வங்கியில் கட்டாததால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பல கட்ட போராட்டமும் நடத்தினர்.
மேலும் நகராட்சி கடைகளில் இருந்து வாடகை ரூ. பல லட்சம் நிலுவை உள்ளது. பத்தாண்டுகளாக கமிஷனர் பதவியை இன்ஜினியர்களே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக கமிஷனர் நியமிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் மீது ஏதாவது புகார் கொடுத்து ஊழியர்களே இடமாற்றம் செய்ய வழி ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டு கமிஷனர் மாற்றப்பட்டு தற்போது மூன்றாவது கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஜூலையில் அப்துல்ஹரிஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
நவம்பரில் அவரை மாற்றி வெங்கடலட்சுமணனை நியமித்தனர். இந்நிலையில் வெங்கடலட்சுமணனை குளச்சலுக்கு மாற்றி, அங்கிருந்த செந்தில்குமாரை சிவகங்கைக்கு மாற்றியுள்ளனர்.
கமிஷனர் வெங்கடலட்சுமணன் கூறியதாவது:
கடந்தாண்டு நவ., 10 இங்கு பொறுப்பேற்றேன். அப்போது நிதி வசூல் 12 சதவீதம்.
தற்போது 39 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்கள் எல்.ஐ.சி.,க்கு கட்ட வேண்டிய பணம் நவ., வரை செலுத்தப்பட்டுள்ளது.
துாய்மை பணியாளர் குடியிருப்பில், 13 பேர் அவர்கள் தங்க வேண்டிய வீட்டை உள்வாடகைக்கு விட்டதை கண்டறிந்து அவர்களை அப்புறப்படுத்தினோம்.
ஊழியர்கள், 3 பேர் பணிக்கு வராமல் வேறு நபர்களை பணியமர்த்தி அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் சம்பளம் கொடுத்துள்ளனர். அவர்களை கண்டறிந்து பணி நீக்கம் செய்தேன்.
வாடகை தராததால், 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. டெபாசிட் கட்டாத 7 ஆயிரத்து 500 பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்க அறிவுறுத்தப்பட்டது. இது அனைத்தும் 57 நாட்களில் செய்யப்பட்டது. எங்கு மாற்றினாலும் பணி செய்ய தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.