/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முடங்கியது இளையான்குடி புது பஸ்ஸ்டாண்ட் முடங்கியது இளையான்குடி புது பஸ்ஸ்டாண்ட்
முடங்கியது இளையான்குடி புது பஸ்ஸ்டாண்ட்
முடங்கியது இளையான்குடி புது பஸ்ஸ்டாண்ட்
முடங்கியது இளையான்குடி புது பஸ்ஸ்டாண்ட்
ADDED : மார் 25, 2025 09:51 PM

இளையான்குடி : இளையான்குடியில் புதிதாக திறக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வராமல் முடங்கிப் போய் உள்ளதால் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் (பொ) சண்முகம் வரவேற்றார். தலைமை அலுவலர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜவேலு (சுயே), ஷேக்(காங்.,): இளையான்குடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.3.74 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்டிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், டவுன் பஸ்கள் செல்லாமல் கண்மாய்க்கரை வழியாக பழைய பஸ் ஸ்டாண்டிற்கே செல்வதால் புது பஸ் ஸ்டாண்ட் செயலற்று உள்ளது.
மேலும் அங்கு கடைகளை எடுத்த வியாபாரிகளும் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
செயல் அலுவலர் (பொ) சண்முகம்: அனைத்து பஸ்களும் புது பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகூர் மீரா அ.தி.மு.க., கவுன்சிலர்: ஏற்கனவே இளையான்குடியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிற நிலையில் தற்போது உழவர் சந்தை கொண்டு வருதற்கான தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும். ஜாகிர் உசேன் தெருவில் வடிகால் கட்ட வேண்டும்.2025-=2026 ஆண்டிற்கான பேரூராட்சி பட்ஜெட்டை மன்றத்தின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
செய்யது ஜெமிமா தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த ரோடுகள், கழிவுநீர் வாய்க்கால்களை சரி செய்ய வேண்டும்.
பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.